TNPSC Thervupettagam

ஐந்து இந்திய மாநிலங்களின் உருவாக்க தினம் 2025 - நவம்பர் 01

November 5 , 2025 16 hrs 0 min 43 0
  • ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 01 ஆம் தேதியன்று, கர்நாடகா, கேரளா, சத்தீஸ்கர், ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து இந்திய மாநிலங்கள் அவற்றின் மாநில உருவாக்க தினத்தைக் கொண்டாடுகின்றன.
  • இந்த தேதியானது, 1956 ஆம் ஆண்டில் மொழியியல் மற்றும் நிர்வாக அளவுருக்களின் அடிப்படையில் இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டதை நினைவுகூருகிறது.
  • கர்நாடகா மாநிலம் ஆனது, கன்னட மொழி பேசும் பகுதிகள் இணைக்கப்பட்டு 1973 ஆம் ஆண்டில் மைசூரு என்பதிலிருந்து கர்நாடகா என மறுபெயரிடப்பட்டதைக் கொண்டாடும் வகையில் கன்னட இராஜ்யோத்சவத்தைக் கொண்டாடுகிறது.
  • கேரள மாநிலமானது மலபார், கொச்சி மற்றும் திருவிதாங்கூர் ஆகியவற்றை இணைத்து 1956 ஆம் ஆண்டில் கேரளாவின் உருவாக்கப்பட்ட தினத்தை கேரள பிறவி தினமாகக் கொண்டாடுகிறது.
  • மத்தியப் பிரதேசத்திலிருந்து பிரிந்த பிறகு, 2000 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று சத்தீஸ்கர் உருவாக்கப்பட்டது.
  • பஞ்சாபிலிருந்து பிரிக்கப்பட்டு, 1966 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று ஹரியானா உருவானது.
  • மத்தியப் பிரதேசம், 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று உருவாக்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்