January 25 , 2022
1195 days
585
- 2022 ஆம் ஆண்டில் உலக நாடுகள் 5 பெரும் இடர்களைச் சந்திக்க உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் அறிவித்துள்ளது.
- அவை ஐந்து எச்சரிக்கைகள் – உலகளாவிய இடர் (Five-alarm global fire) எனக் குறிப்பிடப் படுகின்றன.
- அவையாவன
- கோவிட்-19 பெருந்தொற்று,
- இணைய வழியில் நிகழும் சட்டவிரோத செயல்கள்,
- பருவநிலை நெருக்கடி,
- உலக நிதி அமைப்பின் திவால் நிலை மற்றும்
- சீர்குலைந்த அமைதி மற்றும் பாதுகாப்பு.
- இந்த இடர்களைத் தடுப்பதற்கு (அ) குறைப்பதற்கு வேண்டி ஐக்கிய நாடுகள் சபை சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அவை
- உலக நாடுகள் அவசர கதியில் செயல்பட வேண்டும்.
- பருவநிலை நெருக்கடியைச் சமாளிப்பதற்கு திடீர் நடவடிக்கைகள் அவசியம்.
- இந்தப் பத்தாண்டின் இறுதியில் உலக நாடுகளின் உமிழ்வானது 45% அளவு வரை குறைக்கப் பட வேண்டும்.

Post Views:
585