இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட பெரும் மீட்டர்வேவ் ரேடியோ தொலைநோக்கியைப் (uGMRT) பயன்படுத்தி தேசிய ரேடியோ வானியற்பியல் மையத்தின் வானியலாளர்கள் ஐந்து புதிய மில்லிவிநாடி நியூட்ரான் நட்சத்திரம்/பல்சர்களைக் கண்டுபிடித்தனர்.
பால்வீதியில் உள்ள பழமையான மற்றும் அடர்த்தியான நட்சத்திர அமைப்புகளான மெஸ்ஸியர் 69 மற்றும் மெஸ்ஸியர் 70 ஆகிய பழமையான கோளகக் கொத்துகளில் இந்தப் பல்சர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மில்லிவிநாடி பல்சர்கள் என்பவை அதிவேகமாக சுழலும் நியூட்ரான் நட்சத்திரங்கள் ஆகும் என்ற நிலையில் இவை சில மில்லி வினாடிகளுக்குள் சுழல்கின்றன மற்றும் பொதுவாக இரட்டை நட்சத்திர அமைப்புகளில் உருவாகின்றன.
மெஸ்ஸியர் 69-இல் இரண்டு நியூட்ரான் நட்சத்திரம்/பல்சர்களும், மெஸ்ஸியர் 70-இல் மூன்று நியூட்ரான் நட்சத்திரம்/பல்சர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த இரு கொத்துகளிலும் நியூட்ரான் நட்சத்திரம்/பல்சர்கள் கண்டறியப்படுவது இதுவே முதல் முறையாகும்.
M69A என்ற ஒரு நியூட்ரான் நட்சத்திரம்/பல்சர் ஆனது, வெள்ளை குள்ளன் என கருதப்படும் ஒரு துணை நட்சத்திரத்தைச் சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளதுடன் இது சில நாட்களுக்கு ஒருமுறை தனது சுற்றுப் பாதையை நிறைவு செய்கிறது.