ஐரோப்பிய ஒன்றிய உமிழ்வுப் பட்டியலில் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் முதலிடம்
May 27 , 2023 814 days 372 0
குளோபல் எனர்ஜி திங்க் டேங்க் எம்பர் என்ற நிறுவனம் ‘மறுபடியும் மீறுபவர்கள் : நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் ஐரோப்பிய ஒன்றிய உமிழ்வுப் பட்டியலில் முதலிடம்’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கையினை வெளியிட்டது.
2022 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றிய உமிழ்வு வர்த்தக அமைப்பில் முதல் பத்து பெரிய உமிழ்வுகள் அனைத்தும் நிலக்கரி ஆலைகள் ஆகும்.
ஜெர்மனி மற்றும் போலந்து ஆகியவை இந்தப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
இருப்பினும் நிலக்கரி மின் உமிழ்வின் நீண்ட காலப் போக்கு சரிவையே காட்டுகிறது.
2022 ஆம் ஆண்டில் இதன் மதிப்பு முந்தைய ஒரு தசாப்தத்தை விட 40 சதவீதம் குறைந்து உள்ளது.
நிலக்கரி மின் உமிழ்வு 2021 ஆம் ஆண்டு உடன் ஒப்பிடப் படும் போது 6 சதவீதமாக உயர்ந்துள்ளது, எனினும் 2019 ஆம் ஆண்டின் அளவை விட குறைவாக இருந்தது.