மாசுபடுத்தும் பொருட்களின் இறக்குமதி மீது உலகின் முதல் கார்பன்-டை-ஆக்சைடு உமிழ்வுக் கட்டணத்தினை விதிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முடிவு செய்து உள்ளன.
எஃகு, சிமெண்ட், உரங்கள், அலுமினியம் மற்றும் மின்சாரப் பொருட்களின் இறக்குமதி மீது கார்பன்-டை-ஆக்சைடு உமிழ்வுக் கட்டணத்தினை அறிமுகம் செய்ய ஐரோப்பிய ஒன்றியம் விழைகிறது.
முறையற்ற சுற்றுச்சூழல் விதிகளைக் கொண்ட சில நாடுகளில் தயாரிக்கப்படும் மலிவான பொருட்களால் ஐரோப்பியச் சந்தை நிரம்பி காணப்படுவதால், ஐரோப்பியத் தொழில்துறையைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்தக் கட்டணமானது விதிக்கப் படுகிறது.