பிரிக்ஸ் நாடுகள் ஆனது ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) கார்பன் எல்லை இணக்க முறைமையினை (CBAMs) நியாயமற்றவை மற்றும் பாரபட்சமானவை என்று கூறி மிக கடுமையாக கண்டித்தன.
CBAM என்பது பகுதியளவு கடுமையான உமிழ்வு விதிமுறைகளைக் கொண்ட நாடுகளின் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்படும் கார்பன் அடிப்படையிலான இறக்குமதி வரிகள் ஆகும்.
இது 'கார்பன் கசிவை' தடுப்பதை நோக்கமாகக் கொண்டது.
இத்தகைய ஒருதலைப் பட்ச சுற்றுச்சூழல் வர்த்தகக் கட்டுப்பாடுகள் 1994 ஆம் ஆண்டு பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் (UNFCCC) கொள்கைகளை மீறுவதாக BRICS அறிவித்தது.
பிரேசிலில் நடைபெற்ற BRICS வருடாந்திர உச்சி மாநாட்டின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
வளர்ச்சியடைந்த நாடுகள் தங்கள் UNFCCC உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 100 பில்லியன் டாலர் பருவநிலை நிதியை வழங்க வேண்டும் என்றும், இது 2035 ஆம் ஆண்டிற்குள் 300 பில்லியன் டாலராக உயர வேண்டும் என்றும் BRICS கோரியது.
பயனுள்ள பருவநிலை நடவடிக்கைகளுக்கு ஆண்டிற்கு 1.3 டிரில்லியன் டாலர் தேவை என்று வளர்ந்து வரும் நாடுகள் மதிப்பிடுகின்றன.
2025 ஆம் ஆண்டிற்குள் தகவமைப்பு நிதியை இரட்டிப்பாக்க BRICS அழைப்பு விடுத்து உள்ளது.