ஐரோப்பிய ஒன்றியமானது உலகின் மிகப்பெரியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை அகற்ற வேண்டும் என்ற புதிய ஒரு சட்டத்தை இறுதி செய்துள்ளது.
உலகின் மிகப்பெரும் இணையதளப் பெருநிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட ஒரு சமீபத்திய நடவடிக்கை இதுவாகும்.
டிஜிட்டல் சேவைகள் என்ற சட்டமானது, தவறான தகவல் முதல் வெறுப்பூட்டும் பேச்சு மற்றும் சிறுவர் பாலியல் வன்கொடுமை ஆகியவற்றின் படங்கள் உள்ளிட்டத் தடை செய்யப் பட்ட உள்ளடக்கத்தை வழங்கும் இணைய தளங்களுக்குக் கடுமையான விதி முறைகளை விதிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.