ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி
May 21 , 2026 23 days 115 0
2025-26 ஆம் நிதியாண்டில் (FY26) அமெரிக்கா மற்றும் சீனாவிற்குப் பிறகு, ஐரோப்பிய ஒன்றியம் (EU) இந்தியாவின் மூன்றாவது பெரிய கடல் உணவு ஏற்றுமதி சந்தையாக உருவெடுத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 1.593 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடல் உணவுகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதுடன் இது இந்தியாவின் மொத்த கடல் உணவு ஏற்றுமதி மதிப்பில் 18.94% ஆகும்.
FY25 ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான கடல் உணவு ஏற்றுமதி மதிப்பில் 41.45% ஆகவும், அளவில் 38.29% ஆகவும் அதிகரித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் மீன்வளர்ப்புப் பொருட்களைத் தொடர்ந்து ஏற்றுமதி செய்வதற்கான திருத்தப்பட்ட வரைவுப் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவைச் சேர்த்துள்ளது.
உணவுப் பாதுகாப்பு, மீதிக் கண்காணிப்பு மற்றும் பொறுப்பான மீன்வளர்ப்பு நடைமுறைகளை வலுப்படுத்துவதற்காக கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஏற்றுமதி ஆய்வு சபையில் மேற்கொண்ட முயற்சிகளை இந்தச் சாதனை பிரதிபலிக்கிறது.