TNPSC Thervupettagam

ஒடிசாவில் அதிக வன்முறைக் குற்ற விகிதம் பதிவு

May 11 , 2026 4 days 91 0
  • தேசிய குற்ற ஆவணக் காப்பக (NCRB) அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக வன்முறைக் குற்ற விகிதத்தை ஒடிசா பதிவு செய்துள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் ஒடிசாவில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 161.6 வன்முறைக் குற்றப் பாதிக்கப்பட்டவர்கள் பதிவாகியுள்ளனர்.
  • இந்த மாநிலம் 75,403 வன்முறைக் குற்ற வழக்குகளைப் பதிவு செய்துள்ளது; இது பீகார், மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவில் நான்காவது அதிகபட்சமாகும்.
  • ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 83 பாதிக்கப்பட்டவர்களுடன் பீகார் மாநிலம் இதில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
  • பெண்களுக்கு எதிரான குற்றங்களில், ஒடிசா ஒரு லட்சம் பெண்களுக்கு சுமார் 118.3 குற்றங்களுடன் இரண்டாம் இடத்திலும், தெலுங்கானா முதலிடத்திலும் உள்ளன.
  • ஒடிசாவில் கற்பழிப்பு வழக்குகள் 2024 ஆம் ஆண்டில் 3,054 ஆக இருந்தது 2025 ஆம் ஆண்டில் 2,994 ஆகக் குறைந்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
  • 2024 ஆம் ஆண்டில் ஒடிசாவில் 6,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்; இதில் பெண் குழந்தைகள் சுமார் 87% ஆவர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்