ஒடிசாவில் தலை ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டனர்
September 8 , 2019 2250 days 736 0
இந்தியாவில் தில்லி எய்ம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் ஒடிசாவைச் சேர்ந்த தலை ஒட்டிப் பிறந்த இரட்டையர்களான ஜக்கா மற்றும் பனியா ஆகியோருக்கு அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக மறுவாழ்வு அளித்துள்ளனர்.
இரு குழந்தைகளும் மூளை மற்றும் மண்டை ஓடு இணைந்து காணப்பட்டனர்.
2017 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்து தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப் பட்டனர்.
கடந்த 50 ஆண்டு காலங்களில் உலக அளவில் 10-15 குழந்தைகள் மட்டுமே இத்தகு அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிர் வாழ்கின்றனர். இந்தியாவில் இப்படிப்பட்ட சிகிச்சைக்குப் பின் உயிர் வாழும் ஒரே இரட்டையர் இவர்களேயாவர்.