ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 100 ஆம் ஆண்டு நிறைவு
October 5 , 2025 14 days 48 0
ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது, 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 01 முதல் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 01 வரையில் பல்வேறு நிகழ்வுகளுடன் அதன் 100 ஆம் ஆண்டு நிறைவினைக் கொண்டாடுகிறது.
இந்த ஆணையமானது முதன்முதலில் 1926 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதியன்று இந்திய அரசு சட்டம் 1919 மற்றும் லீ ஆணையத்தின் பரிந்துரைகளின் கீழ் அமைக்கப் பட்டது.
1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் படி, இது 1937 ஆம் ஆண்டில் கூட்டு அரசுப் பணியாளர் தேர்வாணையமாக மாறியது.
இதற்கு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதியன்று ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் என மறுபெயரிடப்பட்டது.
அரசியலமைப்பின் 315 முதல் 323 வரையிலான சரத்துகள், பாரபட்சமற்ற ஆட் சேர்ப்பிற்கான அரசியலமைப்பு சார் சுயாட்சியுடன் கூடிய ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையமாக இதை மாற்றியது.