TNPSC Thervupettagam

ஒப்புக் கொள்ளப் பட்ட முடிவுகளின் கட்டமைப்பு

March 31 , 2026 12 hrs 0 min 22 0
  • உலகம் முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான நீதி கிடைப்பதை மேம்படுத்துவதற்காக, ஐக்கிய நாடுகள் சபை 'ஒப்புக் கொள்ளப்பட்ட முடிவுகளின் கட்டமைப்பை' ஏற்றுக் கொண்டது.
  • இது நியூயார்க்கில் நடைபெற்ற பெண்களின் நிலை குறித்த ஆணையத்தின் (CSW) 70-வது கூட்டத்தொடரில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • இந்தக் கட்டமைப்பு சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தாது; இது உறுப்பு நாடுகள் தங்கள் நீதி அமைப்புகளை மேம்படுத்துவதற்கான ஒரு வழிகாட்டுதல் கொள்கையாக செயல் படுகிறது.
  • இது பாகுபாடான சட்டங்களை நீக்குவது மற்றும் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குச் சமமான சட்ட உரிமைகளை உறுதி செய்வதில் கவனம் செலுத்துகிறது.
  • இணையத்திலும் நேரடியாகவும் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையிலிருந்து பாதுகாப்பை வலுப்படுத்துவதையும், ஆதரவு அமைப்புகளை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்