TNPSC Thervupettagam

'ஒரு அதிகாரிக்கு ஓர் அரசு வாகனம்' கொள்கை

August 4 , 2026 2 days 75 0
  • நிதி அமைச்சகம் "ஒரு அதிகாரிக்கு ஓர் அரசு வாகனம்" என்ற கடுமையான கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • தேவையற்ற செலவுகளைக் குறைப்பதையும், அரசு வளங்கள் தவறாகப் பயன்படுத்தப் படுவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • திருத்தப்பட்ட விதிகளின்படி, தகுதியுள்ள அதிகாரிகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அரசு வாகனங்களை ஒதுக்க முடியாது என்பது தெளிவாகிறது; மற்றொரு அமைச்சகம், துறை, பொதுத்துறை நிறுவனம் (PSU) அல்லது தன்னாட்சி அமைப்பில் கூடுதல் பொறுப்புகளை அவர்கள் வகித்தாலும் கூட இந்த விதி பொருந்தும்.
  • செலவினத் துறையின் (Department of Expenditure) ஓர் அலுவலகக் குறிப்பாணை மூலம் இந்த புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
  • அரசு வாகனங்கள் அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப் படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
  • திருத்தப்பட்ட விதிமுறைகளின் கீழ், ஏற்கனவே அரசுப் பணியாளர் வாகனத்தைப் பயன்படுத்தும் உரிமை பெற்ற ஒரு அதிகாரி, மற்றொரு அலுவலகம் அல்லது அமைப்பின் பொறுப்பை ஏற்றாலும் அதே வாகனத்தைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
  • அத்தகைய சூழல்களில் கூடுதல் அதிகாரப்பூர்வ வாகனத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
  • அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பணி அல்லது பயணங்களின் போது தவிர, பொதுத் துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள் அல்லது பகுதி-அரசு அமைப்புகளுக்குச் சொந்தமான வாகனங்களை மத்திய அரசு அதிகாரிகள் பயன்படுத்துவதையும் அரசு தடை செய்துள்ளது.
  • பயன்படுத்தப்படாத அல்லது உபரியாக உள்ள வாகனங்களை அதிகாரப்பூர்வமற்ற பயன்பாட்டிற்கு உட்படுத்தாமல், பாதுகாப்பான முறையில் வைத்திருக்க வேண்டும் என்று துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • நிர்வாகத் திறனை மேம்படுத்துதல், பணிகளில் தேவையற்ற இரட்டிப்பைத் தவிர்த்தல் மற்றும் அரசு வளங்களைச் சிறப்பாக நிர்வகித்தல் ஆகியவை இதன் நோக்கங்கள் ஆகும்.
  • நிதி ஒழுக்கத்தை வலுப்படுத்துவதும், வரி செலுத்துவோரின் நிதியால் உருவாக்கப் பட்ட வளங்கள் மத்திய அரசு முழுவதும் பொறுப்புடன் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதும் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்