ஒரு கப்பலிலிருந்து மற்றொரு கப்பலுக்கு LNG பரிமாற்றம்
November 23 , 2023 634 days 409 0
இந்தியாவின் முன்னணி எரிவாயு நிறுவனமான GAIL, உலகிலேயே முதல் முறையாக ஒரு கப்பலிலிருந்து மற்றொரு கப்பலுக்குத் திரவமக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) பரிமாற்றத்தை மேற்கொண்டு ஒரு புதிய சாதனையை எட்டியுள்ளது.
இந்த நடவடிக்கையானது சரக்குப் போக்குவரத்துச் செலவுகளை குறைப்பதையும் உமிழ்வைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் புதுமையான அணுகுமுறையின் விளைவாக 7,000 டன்கள் வரை CO2 உமிழ்வு குறைக்கப் பட்டதோடு. மேலும், GAIL நிறுவனத்தின் கப்பலுக்கான பயணக் காலத்தை 54 நாட்களிலிருந்து 27 நாட்களாகக் குறைத்துள்ளது.