ஒரு சிறந்த வலையமைப்பை உருவாக்குதல் (www) - டிம் பெர்னர்ஸ் லீ
November 28 , 2019 2175 days 758 0
உலகளாவிய வலையமைப்பின் கண்டுபிடிப்பாளரான டிம் பெர்னர்ஸ் லீ என்பவர் உலகெங்கிலும் உள்ள 80 நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் ஆகியவற்றுடன் இணைந்து இணையத்திற்கான ஒரு புதிய ஒப்பந்தத்தை அறிவித்துள்ளார்.
அனைத்து பங்குதாரர்களுக்கும் ஒரு "சிறந்த" வலையமைப்பை உருவாக்குவதற்கு ஒரு உலகளாவிய செயல் திட்டத்தை உருவாக்குவதே இந்தக் கருத்தின் நோக்கமாகும்.
இந்த ஒப்பந்தமானது அரசாங்கங்கள், குடிமக்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு தலா மூன்று கொள்கைகள் என்று, மொத்தம் 9 கொள்கைகளைக் கொண்டுள்ளது.