சர்வதேச சூரியசக்திக் கூட்டிணைவின் 4வது பொதுச் சபையானது காணொளி வாயிலாக நடத்தப்படுகிறது.
இந்தியாவின் ஒரு சூரியன் ஓர் உலகம் ஒரு கட்டமைப்பு என்ற முன்னெடுப்பின் செயலாக்கம் (One Sun One World One Grid – OSOWOG) உள்ளிட்ட சூரியசக்தித் துறையின் பல முன்னெடுப்புகள் இந்தச் சபையில் விவாதிக்கப்படும்.
OSOWOG என்பது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை “The Sun Never Sets” என்ற ஒரு தொலைநோக்குடன் இணைப்பதற்கான இந்தியாவின் ஒரு முன்னெடுப்பாகும்.
இந்த முன்னெடுப்பானது 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற சர்வதேச சூரியசக்திக் கூட்டிணைவின் முதலாவது பொதுச் சபையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் குறிப்பிடப்பட்டது.