பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரிட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் இணைந்து ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 26வது பங்குதாரர்கள் பருவநிலை மாநாட்டில் “ஒரு சூரியன், ஓர் உலகம், ஒரு கட்டமைப்பு” என்ற முன்னெடுப்பினைத் தொடங்கி உள்ளனர்.
இந்தத் திட்டமானது உலகம் முழுவதும் சூரிய ஆற்றலை விநியோகிப்பதற்காக “நாடுகளுக்கிடையேயான தேசிய மின்சாரக் கட்டமைப்பினை” அமைப்பதற்கு என்று உருவாக்கப் பட்டதாகும்.
இந்தத் திட்டத்தின் பின்னணியிலுள்ள நோக்கமானது “The Sun Never Sets” என்பதாகும்.
சூரிய ஒளி ஆற்றலின் சவால்களைச் சமாளிப்பதில் இந்த திட்டமானது பயன்படுத்தப் படும்.