2020-21 ஆம் ஆண்டிற்கான பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சாய் யோஜனாவின் ஒரு துளி அதிகப் பயிர் என்ற திட்டத்தின் கீழ் இந்திய அரசானது ரூ4,000 கோடியை ஒதுக்கியுள்ளது.
பிரதான் மந்திரி கிருஷி சின்சாயி யோஜனாவின் ஒரு துளி அதிகப் பயிர் என்ற திட்டத்தின் கீழ் தெளிப்பு மற்றும் சொட்டு நீர்ப் பாசனம் மூலம் திறன்மிகு நீர்ப் பயன்பாட்டை இது மையமாகக் கொண்டுள்ளது.
உரப் பயன்பாடு, தொழிலாளர் செலவுகள் மற்றும் உள்ளீட்டுச் செலவுகளைக் குறைப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்துடன், நபார்டு (வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டிற்கான தேசிய வங்கி) வங்கியுடன் இணைந்து ரூ. 5 ஆயிரம் கோடி நுண்பாசன நிதிய மூலதனத்தை உருவாக்குவது குறித்தும் இந்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.