இந்தியப் பிரதமர் தேசியப் பொதுப் போக்குவரத்து அட்டை என்ற “ஒரு தேசம் ஒரு அட்டையை” தொடங்கி வைத்தார்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த அட்டையானது நாடு முழுவதும் போக்குவரத்து, மெட்ரோ சேவைகள், சுங்க வரி, வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கான கட்டணம், சில்லறை வணிகம், பணத்தைத் திரும்பப் பெறல் உள்ளிட்ட பல்வேறு வகையான கட்டணங்களை செலுத்துவதற்கு பயனாளர்களை அனுமதிக்கிறது.
இந்த அட்டையானது ரூபே அட்டையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. எனவே இந்தியா வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தை சார்ந்திருக்க வேண்டியதில்லை.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகமானது தேசியப் பொதுப் போக்குவரத்து அட்டையைக் (NCMC - National Common Mobility Card) கொண்டு வந்துள்ளது.