இந்திய மின்கட்டமைப்புக் கழக நிறுவனமானது ஒரு தேசம் ஒரு கட்டமைப்பு ஒரு அதிர்வெண் என்ற திட்டத்தின் முதலாமாண்டு நிறைவினைக் கொண்டாடுகிறது.
இத்திட்டமானது அனைத்து வட்டாரக் கட்டமைப்புகளையும் ஒத்திசைவான முறையில் இணைத்துத் தேசிய அளவில் ஒரே அதிர்வெண் உள்ளவாறு (அதிர்வெண் கற்றை 49.90 முதல் 50.05 Hz வரை) அமைக்கும்.
அனைத்து வட்டாரக் கட்டமைப்புகளை ஒத்திசைத்து ஒன்றிணைப்பது என்பது ஆற்றல் மூலப் பகுதிகளிலிருந்து ஆற்றல் பெறும் மையங்களுக்கு ஆற்றல் பரிமாற்றுதல் என்பதின் மூலமாக பற்றாக்குறையாக உள்ள இயற்கை வளங்களைத் திறம்பட பயன்படுத்தச் செய்வதில் உதவும்.
மேலும், இது வட்டாரங்கள் முழுவதும் மின் விநியோகத்தை மேற்கொள்ளும் ஒரு துடிப்பு மிக்க மின்சாரச் சந்தையை உருவாக்குவதற்கு வழிவகுக்கும்.