'ஒரு தேசம், ஒரு நிலப் பதிவு' முன்னெடுப்பானது, இந்தியாவில் உள்ள அனைத்து நகர்ப்புற நிலப் பகுதிகளையும் டிஜிட்டல் முறையில் வரைபடமாக்கி அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது டிஜிட்டல் இந்தியா நிலப் பதிவுகள் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ஒரு சோதனைத் திட்டமான நக்சா திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
நக்சா மேம்படுத்தப் பட்ட புவியியல் வரைபடமாக்கல், உலகளாவிய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பு மற்றும் வலை தளப் புவியிட தகவல் அமைப்பு கருவிகளைப் பயன்படுத்துகிறது.
இந்த சோதனைத் திட்டம் ஆனது 28 மாநிலங்கள் மற்றும் 3 ஒன்றியப் பிரதேசங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது.