TNPSC Thervupettagam

ஒருங்கிணைக்கப்பட்ட போர்ப் படைகள்

July 30 , 2019 2115 days 744 0
  • முதலாவது ஒருங்கிணைக்கப்பட்ட போர்ப் படைகள் (Integrated Battle Groups - IBGs) என்ற கருத்தானது விரைவில் செயல்படுத்தப்படும் என்று இந்திய இராணுவம் அறிவித்துள்ளது. இது அடுத்த மாதத்தின் இறுதியில் அமைக்கப் படவிருக்கின்றது.
  • IBGகள் படைப்பிரிவு அளவிலான, சுறுசுறுப்பான, தன்னிறைவு பெற்ற போர் அமைப்புகளாகும். இது போரின் போது எதிரி இராணுவத்திற்கு எதிராக தாக்குதல்களைத் தொடங்கும்.
  • பொதுவாக 1500 முதல் 4000 இராணுவ வீரர்கள் சேர்ந்து ஒரு படைப் பிரிவில் இருப்பர்.
  • IBG ஆனது பாதுகாப்பு மற்றும் தாக்குதல் படையாகச் செயல்படும்.
  • தாக்குதல் நடத்தும் IBGகள் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய இடங்கள் அல்லது எதிரிப் படைகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப் படுகின்ற பகுதிகள் ஆகிய பகுதிகளில் செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்