TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்த அவசரகால உதவி எண் 112

June 2 , 2026 12 days 110 0
  • அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் அனைத்து அவசரகால மற்றும் ஆம்புலன்ஸ் உதவி எண்களையும் மூன்று மாதங்களுக்குள் '112' என்ற ஒற்றை எண்ணாக ஒருங்கிணைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • அவசரகால சிகிச்சைக்கான உரிமை என்பது அரசியலமைப்பின் 21வது சரத்தின் கீழ் உள்ள வாழ்வதற்கான உரிமையின் ஒரு பகுதியாகும் என நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
  • 100, 101, 108, 102, 1033, 1091 போன்ற அனைத்து அவசரகால எண்களும் 112 உடன் இணைக்கப்படும்.
  • மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் முழுமையான தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு ஒருங்கிணைப்பை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.
  • அவசரகால சிகிச்சைச் சேவைகளுக்கு ஆதரவளிக்க Good Samaritan குறைதீர்க்கும் அமைப்பு ஒன்றும் நிறுவப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்