ஒருங்கிணைந்த உயிரி சுத்திகரிப்பு மையத் திட்டத்தினைப் புதுப்பிப்பதற்கான செயல்திட்டம்
October 1 , 2022 1172 days 473 0
இந்திய அரசானது "ஒருங்கிணைந்த உயிரி சுத்திகரிப்பு மையத் திட்டத்தினைப் புதுப்பிப்பதற்கான செயல்திட்டத்தினை" தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் உள்ள உலகத் தூய்மை ஆற்றல் செயல்திட்ட மன்றத்தில் இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டது.
தற்போதைய உயிரி சுத்திகரிப்பு மையங்களின் மதிப்புச் சங்கிலிகளில் உள்ள இடைவெளிகளையும் சவால்களையும் கண்டறிவதன் மூலம் வெற்றிடத்தை நிரப்புவதையும், இந்தத் திட்டத்தினை ஆதரிப்பதற்காக வேண்டி எட்டு முக்கிய நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து அதன் இலக்கை அடைவதில் திட்டத்தின் ஒட்டு மொத்தப் பாதையை வழி நடத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள், இந்திய அரசானது 500-ஜிகாவாட் புதைபடிவமற்ற ஆற்றல் திறன் என்ற இலக்கைப் பூர்த்தி செய்வதற்காக, நாட்டின் ஆற்றல் தேவைகளில் 50% ஆற்றல் தேவைகளைப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலாக மாற்றவும் ஒப்புக்கொண்டது.
ஒட்டு மொத்த கார்பன் உமிழ்வை ஒரு பில்லியன் டன்கள் வரை குறைக்கவும், நாட்டின் கார்பன் செறிவினை 2005 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 45% குறைக்கவும், 2070 ஆம் ஆண்டிற்குள் நிகரச் சுழிய உமிழ்வு நிலையை அடைவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.