இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஜூலை 1, 2026 முதல் 2026 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி - ஒருங்கிணைந்த குறைதீர்ப்பு திட்டத்தினை (RB-IOS) செயல்படுத்த உள்ளது.
இந்தத் திட்டம் ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிரான புகார்களுக்கு செலவு குறைந்த மற்றும் விரைவான குறை தீர்க்கும் வழிமுறையை வழங்குகிறது.
ரிசர்வ் வங்கி, பொதுவாக மூன்று வருடப் பதவிக் காலத்திற்கு, குறைதீர்ப்பாளரையும் துணை குறைதீர்ப்பாளரையும் நியமிக்கலாம்.
ஒரு மையப்படுத்தப்பட்ட ஏற்பு மற்றும் செயலாக்க மையம் (CRPC) இந்தியா முழுவதிலுமிருந்து வரும் புகார்களைக் கையாளும்.
குறைதீர்ப்பாளர், எந்தவொரு பணத் தொகையின் புகார்களையும் தீர்த்து, 30 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க முடியும்.
இதில் புகார்தாரர்கள் அல்லது ஒழுங்குமுறை நிறுவனங்கள், 30 நாட்களுக்குள் மேல் முறையீட்டு ஆணையத்திடம் முடிவுகளை மேல்முறையீடு செய்யலாம் என்பதோடுமேலும் ஒவ்வொரு நிறுவனமும், ரிசர்வ் வங்கியுடன் ஒருங்கிணைப்பினை மேற் கொள்ள ஒரு முதன்மை அதிகாரியை நியமிக்க வேண்டும்.