TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்த குழந்தை சுகாதாரத் திட்டம் - SSBSK

July 5 , 2026 3 days 58 0
  • வீடு சார்ந்த ஒருங்கிணைந்த பராமரிப்பு மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு மூலம் பச்சிளம் குழந்தை மற்றும் குழந்தைகள் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்துவதற்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் சமக்ர சிசு பால் ஸ்வஸ்த்ய காரியக்ரம் (SSBSK) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • SSBSK திட்டமானது 'வீடு சார்ந்த பச்சிளம் குழந்தை பராமரிப்பு' (HBNC) மற்றும் 'வீடு சார்ந்த சிறு குழந்தை பராமரிப்பு' (HBYC) ஆகியவற்றை ஒரே திட்டமாக ஒருங்கிணைக்கிறது.
  • இது 36 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கான அபாய அடிப்படையிலான வீடுகளுக்கே சென்று பார்வையிடும் திட்டத்தை வழங்குவதுடன் குறைப் பிரசவம் மற்றும் குறைவான எடை கொண்ட குழந்தைகளுக்கு கூடுதல் முறை பார்வையிடும் வசதியும் இதில் அடங்கும்.
  • அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHA), துணை செவிலியர் மருத்துவச்சிகள் (ANM), சமூக சுகாதார அலுவலர்கள் (CHO) மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் போன்ற முன்களப் பணியாளர்கள் இத்திட்டத்தைச் செயல் படுத்துகின்றனர்.
  • இதில் தாய்மார்களின் மனநலப் பரிசோதனை, வளர்ச்சிக் கண்காணிப்பு, நோய்த் தடுப்பு ஆதரவு மற்றும் குழந்தைப் பருவத்தின் ஆரம்பகால வளர்ச்சி நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்