இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆனது, நிதி சார் சொத்துக்களைக் குறியாக்கம் செய்வதற்காக ஒருங்கிணைந்த சந்தைகள் இடைமுகத்தை (UMI) அறிமுகப் படுத்தி உள்ளது.
UMI ஆனது, மொத்த மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC) மற்றும் சொத்துக் குறியாக்கத்திற்கு தொடர் சங்கிலித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
குறியாக்கம் ஆனது டிஜிட்டல் குறியீடுகள் மூலம் நிஜ உலகச் சொத்துக்களின் பகுதி உரிமம் மற்றும் உலகளாவிய வர்த்தகத்தினை அனுமதிக்கிறது.
RBI வங்கி, டிஜிட்டல் கட்டணங்களை மேம்படுத்துவதற்காக செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான UPI HELP, UPI உடன் கூடிய IoT கொடுப்பனவுகள், வங்கி இணைப்பு மற்றும் UPI ரிசர்வ் பே ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தியது.