TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்த சாலை விபத்துகள் தரவுதளத் திட்டம் (iRAD)

September 18 , 2020 1781 days 694 0
  • மத்திய அரசானது நாடு முழுவதும்  ஒருங்கிணைந்த சாலை விபத்துகள் தரவு தளத் திட்டத்தினை (iRAD) செயல்படுத்துகின்றது. அது தொடர்பான செயலியானது நிகழ்விடத்திலேயே விபத்து குறித்த தகவலைச் சேகரிக்க வழிவகை செய்கின்றது.
  • ஆரம்பத்தில் இந்தத் திட்டமானது மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப் படவுள்ளது.
  • இந்தச் செயலியானது காவல் துறை, போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் பல்வேறு பங்குதாரர்கள் தங்களது கைபேசிகளைப் பயன்படுத்தி நிகழ்விடத்திலேயே விபத்து குறித்த தகவலைச் சேகரிக்க வழிவகை செய்கின்றது.
  • இந்தத் தரவுகளானது பின்னாளில் சாலைக் கட்டமைப்பு மற்றும் விபத்து குறித்த தரவைப் பதிவு செய்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக தீர்வு நடவடிக்கைகள் மற்றும் சாலை விபத்துகளுக்கான காரணங்களைக் கண்டறிதல் போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்