ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி
January 23 , 2020
2012 days
686
- இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நேபாள பிரதமர் ஓலி ஆகியோர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை பீகாரில் ஜோக்பானி-பிராட்நகரில் திறந்து வைத்தனர்.
- இந்திய அரசின் உதவி மூலம் இந்திய - நேபாள நாடுகளின் எல்லையில் கட்டப்பட்ட இரண்டாவது சோதனைச் சாவடி இதுவாகும்.
- இந்தப் புதிய ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியின் நோக்கமானது எல்லைக்கு அப்பால் உள்ள மக்களின் வர்த்தகம் மற்றும் போக்குவரத்தை எளிதாக்குவதாகும்.
- இவ்விரு நாடுகளின் முதலாவது ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியானது 2018 ஆம் ஆண்டில் பீகாரில் ராக்சால்-பிர்குஞ்சில் கட்டப்பட்டது.

Post Views:
686