இந்தியத் தர நிர்ணய அமைப்பின் (BIS) நிறுவன தினம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 6 அன்று கொண்டாடப் படுகிறது.
இந்த நிகழ்வில் மத்திய அரசு, புதிய இந்தியத் தர நிர்ணய அமைப்பின் (BIS) ஒருங்கிணைந்த தரப்படுத்தல் இணையதளத்தின் பீட்டா பதிப்பை அறிமுகப் படுத்தி உள்ளது.
மேலும் இந்த நிகழ்வில் கல்வியறிவு, திறன்கள் மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் தகுதிகளை அங்கீகரிப்பதற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட முன்னெடுப்பான BIS-SAKSHAM (கல்வியறிவு, திறன்கள் மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் தகுதிகளை அங்கீகரிப்பதற்கான திட்டம்) எனும் வருடாந்திர சிறப்பு அங்கீகாரத் திட்டமும் இந்த நிகழ்வில் தொடங்கப்பட்டது.
“SHINE - தரநிலைகள் அதிகாரம் பெற்ற பெண்களுக்குத் தகவல் அளித்து வளர உதவுதல்” என்பது BISன் ஒரு புதிய திட்டமாகும் என்பதோடு இது இந்தியாவின் தர நிலைப் பயணத்தில் பெண்களை மையத்தில் கொண்டுள்ளது.
BIS என்பது நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உள்ள நுகர்வோர் விவகாரங்கள் துறையின் கீழ் செயல்படும் இந்தியாவின் தேசிய அளவிலான தர நிர்ணய அமைப்பாகும்.