TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்த நீர் மேலாண்மைக் குறியீடு 2.0

August 25 , 2019 2172 days 847 0
  • நிதி ஆயோக் ஒருங்கிணைந்த நீர் மேலாண்மைக் குறியீட்டின் 2வது பதிப்பை வெளியிட்டுள்ளது.

  • இது நீர் வளங்களின் திறமையான மேலாண்மையில் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய மற்றும் அவற்றை மேம்படுத்துவதற்கான ஒரு கருவியாகும்.
  • இந்த ஆய்வானது மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகம், மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இது போன்ற ஒரு முதல் குறியீடானது 2018 இல் வெளியிடப்பட்டது.
  • 2019 ஆம் ஆண்டின் தரவரிசையில், 80% மாநிலங்கள் தங்களது நீர் மேலாண்மை மதிப்பீடுகளை மேம்படுத்தியுள்ளன என்று  கண்டறியப்பட்டுள்ளது.

தரவரிசைகள்

  • தரவரிசைக்கான அடிப்படை ஆண்டு : 2017 – 2018
  • இந்தப் பட்டியலில் குஜராத் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து இந்தப் பட்டியலில் ஆந்திரப் பிரசேதம், மத்தியப் பிரதேசம், கோவா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு  ஆகிய மாநிலங்கள் உள்ளன.
  • வட கிழக்கு மற்றும் இமயமலையில் உள்ள மாநிலங்களில் இமாச்சலப் பிரதேசம் முதலிடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து உத்தரகாண்ட், திரிபுரா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்