மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகமானது ஒருங்கிணைந்த பிராந்திய மையத்தைப் (Composite Regional Centre - CRC) போர்ட் பிளேரில் தொடங்கி உள்ளது.
இந்தியாவில் கோழிக்கோடு, போபால், லக்னோ, பாட்னா, குவஹாத்தி, ஸ்ரீநகர், அகமதாபாத், மண்டி மற்றும் சுராகி (சத்தீஸ்கர்) ஆகிய நகரங்களில் ஒருங்கிணைந்த பிராந்திய மையங்கள் அமைந்துள்ளன.
பார்வைக் குறைபாடு, மனநலம் குன்றியவர்கள், மதி இறுக்கம் ஆகியவற்றைக் கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உள்கட்டமைப்பு மற்றும் வளங்கள் ஆகியவற்றை உருவாக்குவதற்காக CRCகள் தொடங்கப் பட்டுள்ளன.
இந்த மையங்கள் நகர்ப்புறங்களை விட உள்ளூர் மக்களின் மீது கவனத்தைச் செலுத்துகின்றன.
இந்த மையங்கள் மத்திய, மாவட்ட மற்றும் மாநில அளவில் புனர்வாழ்வு நிபுணர்களுக்குப் பயிற்சி அளித்தல் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன.