ஒருங்கிணைந்த பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு - RCEP
November 7 , 2019 2196 days 845 0
இந்தியப் பிரதமர் பாங்காக்கில் நடந்த ஒருங்கிணைந்த பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு (Regional Comprehensive Economic Partnership-RCEP) அமைப்பின் மூன்றாவது உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்.
இந்தியாவிற்குள் அதிக அளவில் சீனப் பொருட்களின் இறக்குமதி ஏற்படக் கூடும் என்ற அச்சத்தின் பேரில், இந்தக் கூட்டமைப்புடன் இணைய வேண்டாம் என்று இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
RCEP இன் கீழ், சீனா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திலிருந்து 74% பொருட்கள் மற்றும் ஜப்பான், தென் கொரியா மற்றும் ஆசியான் ஆகிய நாடுகளில் இருந்து 90% பொருட்கள் ஆகியவற்றுக்கான வரிகளை நீக்க இந்தியா நிர்பந்திக்கப்படும்.
இந்தியா ஏற்கனவே சீனாவுடன் 57 பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தகப் பற்றாக்குறையை கொண்டுள்ளது. இது கொள்கை வகுப்பாளர்களுக்கு மிகவும் பிரச்சனையாக உள்ளது.
RCEP
RCEP என்பது தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பில் உள்ள (ஆசியான்) 10 உறுப்பு நாடுகள் மற்றும் ஆசியான் குழுவில் உள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை (FTA) கொண்ட ஆறு நாடுகள் என்று மொத்தம் 16 நாடுகளிடையேயான ஒரு வர்த்தக ஒப்பந்தமாகும்.
இதில் ஆஸ்திரேலியா, சீனா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளும் அடங்கும்.
இது உலகின் ஒரு மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாக இருக்கும்.