TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம்

October 9 , 2026 2 days 48 0
  • ஒருங்கிணைந்த போக்குவரத்து மற்றும் தளவாடத் திட்டமிடலுக்கான சிறப்பு நோக்கு வாகனமாக ஒருங்கிணைந்த போக்குவரத்து மற்றும் தளவாட ஆணையத்தை (ITLA) அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • ITLA ஆனது போக்குவரத்துத் திட்டமிடல், ஆராய்ச்சி, திட்ட மதிப்பீடு, கண்காணிப்பு, கொள்கை ஆதரவு மற்றும் தரவுப் பகுப்பாய்வு ஆகியவற்றுக்கான தேசிய அளவிலான உச்ச அமைப்பாகச் செயல்படும்.
  • இது சாலைகள், ரயில்வே துறை, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, விமான போக்குவரத்து, உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மற்றும் நகர்ப்புற போக்குவரத்து ஆகியவற்றை உள்ளடக்கிய 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலான திட்டமிடல் காலவரம்புடன் கூடிய தேசியப் போக்குவரத்துப் பெருந்திட்டம் ஒன்றைத் தயாரிக்கும்.
  • 500 கோடி ரூபாய் அல்லது அதற்கும் மேலான செலவிலான இந்திய அரசின் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை ITLA தொழில்நுட்ப ரீதியாக மதிப்பீடு செய்து கண்காணிக்கும்.
  • இது GSTN மின்னணு-வழிக் கட்டணங்கள், ஃபாஸ்ட்டேக், வாகன், ஜிபிஎஸ் மற்றும் நகர்ப்புற போக்குவரத்துக் அமைப்புகள் ஆகியவற்றின் தரவுகளைப் பயன்படுத்தி தேசியப் போக்குவரத்துத் தரவுக் களஞ்சியம் ஒன்றை உருவாக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்