ஒருங்கிணைந்த போக்குவரத்து மற்றும் தளவாடத் திட்டமிடலுக்கான சிறப்பு நோக்கு வாகனமாக ஒருங்கிணைந்த போக்குவரத்து மற்றும் தளவாட ஆணையத்தை (ITLA) அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
ITLA ஆனது போக்குவரத்துத் திட்டமிடல், ஆராய்ச்சி, திட்ட மதிப்பீடு, கண்காணிப்பு, கொள்கை ஆதரவு மற்றும் தரவுப் பகுப்பாய்வு ஆகியவற்றுக்கான தேசிய அளவிலான உச்ச அமைப்பாகச் செயல்படும்.
இது சாலைகள், ரயில்வே துறை, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, விமான போக்குவரத்து, உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மற்றும் நகர்ப்புற போக்குவரத்து ஆகியவற்றை உள்ளடக்கிய 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலான திட்டமிடல் காலவரம்புடன் கூடிய தேசியப் போக்குவரத்துப் பெருந்திட்டம் ஒன்றைத் தயாரிக்கும்.
500 கோடி ரூபாய் அல்லது அதற்கும் மேலான செலவிலான இந்திய அரசின் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை ITLA தொழில்நுட்ப ரீதியாக மதிப்பீடு செய்து கண்காணிக்கும்.
இது GSTN மின்னணு-வழிக் கட்டணங்கள், ஃபாஸ்ட்டேக், வாகன், ஜிபிஎஸ் மற்றும் நகர்ப்புற போக்குவரத்துக் அமைப்புகள் ஆகியவற்றின் தரவுகளைப் பயன்படுத்தி தேசியப் போக்குவரத்துத் தரவுக் களஞ்சியம் ஒன்றை உருவாக்கும்.