நாட்டிலுள்ள அனைத்து அரசு மருத்துவ நிறுவனங்களிலும் குறிப்பாக AIIMS போன்ற நிறுவனங்களிலும் ஒருங்கிணைந்த மருத்துவ மையங்களைத் திறப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இத்தகைய மையங்களைத் திறப்பதால், இந்திய மருத்துவ முறையினை நவீன மருத்துவ முறைகளோடு ஒத்திசைப்பதற்காகவும், நோயாளிகளுக்குப் பலதரப்பட்ட மருத்துவச் சேவைகளை வழங்கவும் உதவும்.
இந்த ஒருங்கிணைந்த மருத்துவச் சேவையானது, அலோபதி மருத்துவத்தில் நவீன முன்னேற்றங்களைப் பயன்படுத்துவதோடு, இந்தியாவின் வளமானப் பாரம்பரியம் மற்றும் மருத்துவ அறிவின் திறனைத் திறம்படப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.