ஒருங்கிணைந்த வெப்பம் மற்றும் குளிரூட்டும் செயல் திட்டம்
September 11 , 2025 12 days 62 0
iFOREST மற்றும் புவனேஸ்வர் மாநகராட்சிக் கழகம் ஆகியவை நகரத்திற்கான ஒருங்கிணைந்த வெப்பம் மற்றும் குளிரூட்டும் செயல் திட்டத்தை வெளியிட்டன.
நகரத்திற்கும், கிராமப்புறங்களுக்கும் இடையிலான வெப்பநிலை வேறுபாடு தற்போது 2.0 முதல் 5.0 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது.
2024 ஆம் ஆண்டில் 230 நாட்கள் ஆரஞ்சு அல்லது மஞ்சள் எச்சரிக்கை நாட்களாகத் தகுதி பெற்றதுடன், புவனேஸ்வரில் வெப்ப அழுத்தம் அக்டோபர் மாதம் வரை நீடிக்கும்.
2050 ஆம் ஆண்டில், புவனேஸ்வரில் ஒரு வழக்கமான வெப்பமான நாள் ஆனது இன்றைய வெப்ப அலை சூழல்களைப் போல உணரப்படும் என்று கணிக்கப் பட்டு உள்ளது.
குளிர்ச்சியூட்டுவதற்கான நடவடிக்கைகள் தற்போது நகர மின்சாரத்தில் மூன்றில் ஒரு பங்கைப் பயன்படுத்துகிறது என்பதோடு இது கோடை மாதங்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்காக உயர்கிறது.
வெப்ப அழுத்தத்தால் புவனேஸ்வரின் மொத்த ஆண்டு வருமான இழப்பு தற்போது 8.6 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதை வெளியிட்ட முதல் இந்திய நகரம் ஓடிசாவின் புவனேஸ்வர் ஆகும்.