TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்த வெப்பம் மற்றும் குளிரூட்டும் செயல் திட்டம்

September 11 , 2025 11 days 56 0
  • iFOREST மற்றும் புவனேஸ்வர் மாநகராட்சிக் கழகம் ஆகியவை நகரத்திற்கான ஒருங்கிணைந்த வெப்பம் மற்றும் குளிரூட்டும் செயல் திட்டத்தை வெளியிட்டன.
  • நகரத்திற்கும், கிராமப்புறங்களுக்கும் இடையிலான வெப்பநிலை வேறுபாடு தற்போது 2.0 முதல் 5.0 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் 230 நாட்கள் ஆரஞ்சு அல்லது மஞ்சள் எச்சரிக்கை நாட்களாகத் தகுதி பெற்றதுடன், புவனேஸ்வரில் வெப்ப அழுத்தம் அக்டோபர் மாதம் வரை நீடிக்கும்.
  • 2050 ஆம் ஆண்டில், புவனேஸ்வரில் ஒரு வழக்கமான வெப்பமான நாள் ஆனது இன்றைய வெப்ப அலை சூழல்களைப் போல உணரப்படும் என்று கணிக்கப் பட்டு ள்ளது.
  • குளிர்ச்சியூட்டுவதற்கான நடவடிக்கைகள் தற்போது நகர மின்சாரத்தில் மூன்றில் ஒரு பங்கைப் பயன்படுத்துகிறது என்பதோடு இது கோடை மாதங்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்காக உயர்கிறது.
  • வெப்ப அழுத்தத்தால் புவனேஸ்வரின் மொத்த ஆண்டு வருமான இழப்பு தற்போது 8.6 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இதை வெளியிட்ட முதல் இந்திய நகரம் ஓடிசாவின் புவனேஸ்வர் ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்