ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகத்தில் மேலும் 13 இந்திய வங்கிகள்
July 20 , 2025 72 days 111 0
சர்வதேசப் பரிவர்த்தனைகளுக்கான இந்தியத் தேசியக் கொடுப்பனவுக் கழகம் (NPCI) ஆனது பணம் அனுப்புவதை எளிதாக்குவதற்காக UPI-PayNow இணைப்பில் மேலும் 13 வங்கிகளைச் சேர்க்கிறது.
NPCI சர்வதேசப் பண வழங்கீட்டு கழக லிமிடெட் (NIPL) என்பது இந்தியத் தேசியக் கொடுப்பனவு கழகத்தின் (NPCI) சர்வதேசப் பிரிவாகும்.
இது இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான அதன் வரம்பை விரிவுபடுத்தி பன்னாட்டுப் பணப் பரிமாற்றங்களை எளிதாக்குகிறது.
இது தனிநபர்களிடையேயான நிகழ்நேர பன்னாட்டு நிதிப் பரிமாற்றங்களை மிகவும் எளிதாக்குகிறது.
தற்போது, இந்தியப் பயனர்கள் UPI அடையாள முகவரி மூலம் பணம் பெறலாம் மற்றும் சிங்கப்பூரில் உள்ள பயனர்களுக்கு அவர்களின் கைபேசி எண் அல்லது மெய்நிகர் கட்டண முகவரி (VPAs) மூலம் பணம் அனுப்பலாம்.
UPI-PayNow சேவையானது இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) இடையேயான கூட்டு முன்னெடுப்பாகத் தொடங்கப்பட்டது.
இந்தியாவிற்கு பணம் அனுப்புவதற்கான மிகவும் விரிவாக்கப்பட்ட வலையமைப்பில் தற்போது 19 வங்கிகள் உள்ளன.