ஒருங்கிணைந்தப் பணவழங்கீட்டு இடைமுகப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முன்னெடுப்பு
February 4 , 2022 1314 days 489 0
இந்தியத் தேசியப் பணவழங்கீட்டுக் கழகம் மற்றும் ஒருங்கிணைந்த பணவழங்கிட்டு இடைமுகச் சூழலமைவு (முன்னணி வங்கிகள் மற்றும் நிதித் தொழில் நுட்பங்களை உள்ளடக்கியது) ஆகியவை இந்த முன்னெடுப்பினை அறிவித்துள்ளன.
நுகர்வோர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த முன்னெடுப்பானது தொடங்கப் படுகிறது.
இந்த முன்னெடுப்பின் கீழ் NPCI மற்றும் UPI சூழலமைவு ஆகியவை பிப்ரவரி 01 முதல் 07 வரையிலான நாட்களை ஒருங்கிணைந்தப் பணவழங்கீட்டு இடைமுகப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்க உள்ளன.
மேலும், பிப்ரவரி மாதம் முழுவதும் UPI பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப் பட உள்ளது.