ஒருங்கிணைந்தப் பணவழங்கீட்டு இடைமுகம் மூலம் பணம் எடுத்தல்
April 13 , 2022 1279 days 533 0
இந்திய ரிசர்வ் வங்கியானது அனைத்து தானியங்கிப் பண இயந்திர மையங்களிலும் அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வசதியானது எந்த வங்கியையும் சாராமல் ஒருங்கிணைந்தப் பணவழங்கீட்டு இடைமுகத்தினைப் பயன்படுத்திப் பணம் எடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவானது இந்த ஒரு முடிவை மேற் கொண்டுள்ளது.
அனைத்து வங்கிகளுக்கும், தானியங்கிப் பண இயந்திர மையங்கள் மூலம் அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதியினை அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் அனுமதி வழங்கியுள்ளது.