ஒருங்கிணைந்தப் பருவநிலை மாற்றம் மற்றும் வர்த்தக மன்றம்
November 20 , 2025 8 days 47 0
ஒருங்கிணைந்தப் பருவநிலை மாற்றம் மற்றும் வர்த்தக மன்றம் (IFCCT) ஆனது COP30 மாநாட்டின் தலைமைத்துவத்தால் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.
பருவநிலை இலட்சியமும் வர்த்தகக் கொள்கையும் எவ்வாறு குறுக்கிடுகின்றன என்பதைப் பற்றி விவாதிக்க பேச்சு வார்த்தை சாராத, அரசியல் ரீதியாக ஆதரிக்கப் பட்ட இடத்தை இந்த மன்றம் வழங்குகிறது.
முறையான ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளின் பிணைப்பு சார் கட்டுப்பாடுகள் இல்லாமல் தொழில்நுட்ப மற்றும் கொள்கைத் தீர்வுகளை ஆராய IFCCT வடிவமைக்கப் பட்டுள்ளது.
இது பருவநிலை சார் மதிப்புகளின் அளவுருக்கள், கார்பன் மதிப்புக் கணக்கிடல் மற்றும் பகிரப்பட்ட வர்த்தகப் பருவநிலை கட்டமைப்புகளை வரையறுப்பதில் ஒத்துழைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மன்றம் ஆனது COP30 மாநாட்டின் செயல்பாட்டு நிரலின் ஒரு பகுதியாகும், என்பதோடுமேலும் வர்த்தகம் மற்றும் பருவநிலை நடவடிக்கைகளை சீரமைப்பதன் மூலம் முதல் உலகளாவிய மதிப்பீட்டிற்கு நேரடியாகப் பதிலளிக்கிறது.