TNPSC Thervupettagam

ஒருமித்த விவாகரத்து குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

May 6 , 2023 823 days 381 0
  • உச்ச நீதிமன்றமானது, அரசியலமைப்பின் 142வது சட்டப் பிரிவின் கீழ் அதன் சிறப்பு அதிகாரங்களைச் செயல்படுத்துவதன் மூலம் "மீள முடியாத திருமண முறிவு" அடிப்படையிலான திருமண உறவினை முறிப்பதற்கான தீர்ப்பினைத் தான் வழங்க முடியும் என்று தீர்ப்பளித்துள்ளது.
  • நீதிபதி S.K. கௌல் தலைமையிலான அமர்வானது, 1955 ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின் கீழ் கூறப்பட்ட விவாகரத்திற்கான கட்டாய ஆறு மாதக் காத்திருப்புக் காலத்தினை நீதிமன்றம் தள்ளுபடி செய்யலாம் என்று தீர்ப்பளித்தது.
  • இந்து திருமணச் சட்டத்தின் 13Bவது சட்டப் பிரிவானது, "பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்திற்கான" வழிமுறைகளை வழங்குகிறது.
  • கட்டாய ஆறுமாத காத்திருப்பு காலம் என்பது விவாகரத்திற்குப் பதிவு செய்த தரப்பினர் தங்கள் மனுவைத் திரும்ப பெறுவதற்கு அவகாசம் அளிக்கும் வகையில் வழங்கப் படுகிறது.
  • அரசியலமைப்புச் சட்டத்தின் 142வது சட்டப்பிரிவு, உச்ச நீதிமன்றமானது, அதன் முன் நிலுவையில் உள்ள எந்தவொரு விவகாரங்களுக்கும் "முழுமையான நீதி" வழங்கச் செய்வதற்காக தனது ஆணைகள் மற்றும் உத்தரவுகளை அமலாக்குவதுடன் தொடர்பு உடையதாகும்.
  • 142(1)வது சட்டப்பிரிவின் படி, உச்ச நீதிமன்றத்தினால் இயற்றப்பட்ட ஆணை அல்லது உத்தரவு இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படக் கூடியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்