TNPSC Thervupettagam

ஒரே சீரான தீவிரவாத எதிர்ப்புப் படை அமைப்பு

January 1 , 2026 8 days 98 0
  • தேசியப் புலனாய்வு முகமை (NIA), 2025 ஆம் ஆண்டு தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டில் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான தீவிரவாத எதிர்ப்புப் படை (ATS) அமைப்பின் அவசியத்தை எடுத்துரைத்தது.
  • ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக NIA ஒரு பொதுவான ATS கட்டமைப்பைத் தயாரித்து, அதை மாநிலக் காவல் படைகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.
  • புதுப்பிக்கப்பட்ட குற்றக் கையேடு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்பு தரவுத் தளம் மற்றும் தொலைந்து போன மற்றும் மீட்கப்பட்ட ஆயுதங்கள் தரவுத் தளம் ஆகியவையும் NIA முகமையினால் தொடங்கப்பட்டன.
  • ஒரே சீரான ATS அமைப்பு அனைத்து மாநிலங்களிலும் நிலையான நடைமுறைகள், விரைவான எதிர் நடவடிக்கை மற்றும் சிறந்த விசாரணையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் போன்ற கருவிகளைப் பயன்படுத்தித் தொழில்நுட்பம் சார்ந்ததாகவும், பிராந்திய ரீதியாகவும் மாறி வரும் நவீன தீவிரவாதத்தை இந்த முயற்சி நிவர்த்தி செய்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்