தேசிய உணவுப் பாதுகாப்பிற்கு மிகப் பெரிய அளவில் ஊக்கம் அளிக்கும் விதமாக மத்திய அரசு பின்வரும் மாநிலங்களில் “ஒரே தேசம் ஒரே அட்டை” என்ற ஒரு திட்டத்தை சோதனை முறையில் தொடங்கியுள்ளது.
தெலுங்கானா
ஆந்திரப் பிரதேசம்
மகாராஷ்டிரா
குஜராத்
இந்த முன்னோடித் திட்டமானது 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 லிருந்து நடைமுறைக்கு வருகின்றது.
ஒரே தேசம் ஒரே அட்டை என்ற திட்டமானது உணவுப் பாதுகாப்புப் பயன்களின் விரிவாக்கத்தை அனுமதிக்கக் கோருகின்றது.
v உணவுப் பாதுகாப்பு அட்டைகளை வைத்துள்ள குடும்பதாரர்கள் இந்த மாநிலங்களில் எந்தவொரு நியாய விலைக் கடைகளிலும் மானிய விலையிலான அரிசி மற்றும் கோதுமையைப் பெற முடியும். ஆனால் இந்தச் சேவையைப் பெறுவதற்கு இவர்களுடைய நியாய விலை (குடும்ப) அட்டைகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப் பட்டிருக்க வேண்டும்.