ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடச் செய்வதற்கு வேட்பாளர்களை அனுமதிக்கும் வகையிலான தேர்தல் சட்ட விதியை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து உள்ளது.
இதற்காக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 33(7) என்ற ஒரு பிரிவைச் செல்லாதது மற்றும் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்று அறிவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்தது.
ஆனால், இந்த விவகாரத்தினை நாடாளுமன்றத்தின் நடவடிக்கையின் கீழ் விட்டு விடுவதற்கு நீதிமன்றம் முடிவு செய்தது.
தேர்தல் ஆணையமானது 2018 ஆம் ஆண்டில் தனது உறுதிச் சான்று மூலம் இந்த மனுவை ஆதரித்தது.
2004 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 33(7)வது பிரிவில் திருத்தம் செய்ய முன் மொழியப் பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் அது தெரிவித்திருந்தது.