TNPSC Thervupettagam

ஒரே நாடு ஒரே உரம் திட்டம்

August 30 , 2022 1048 days 1659 0
  • ‘ஒரே நாடு, ஒரே உரம்’ திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
  • இந்தப் புதிய திட்டமானது, ‘பாரத்’ என்ற ஒற்றைத் தயாரிப்பின் பெயரில் நாடு முழுவதும் உள்ள உரத் தயாரிப்புகளில் ஒரே சீரானத் தன்மையை கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உர மானியத் திட்டத்தின் பெயரானது அதிகாரப்பூர்வமாக பிரதான் மந்திரி பாரதிய ஜானுர்வரக் பரி யோஜனா என மறுபெயரிடப்பட்டுள்ளது.
  • இனி பொதுத் துறையால் அல்லது தனியார் துறையால் உற்பத்தி செய்யப்பட்டதா என்பதைப் பொருட்படுத்தாமல் அனைத்து உரத் தயாரிப்புகளும், ‘பாரத்’ என்ற ஒரே தயாரிப்புப் பெயரைக் கொண்டிருக்க வேண்டும்.
  • பல்வேறு வகையான உரப் பொருட்கள், அதாவது, 'பாரத் யூரியா', 'பாரத் DAP', 'பாரத் MOP' மற்றும் 'பாரத் NPK' என்பது போன்ற பெயர்கள்,  பாரத் என்ற தயாரிப்புப் பெயரை மட்டுமே கொண்டிருக்க வேண்டும்.
  • பிரதான் மந்திரி பாரதிய ஜானுர்வரக் பரி யோஜனா திட்டத்தின் புதிய விதிகள் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 02 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்