TNPSC Thervupettagam

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த 23வது சட்ட ஆணையம்

December 6 , 2025 20 days 95 0
  • கூட்டு நாடாளுமன்றக் குழுவிடம் (JPC - ஜேபிசி) சட்ட ஆணையம், மசோதாக்களும், ஒத்திசைவான தேர்தல்களுக்கான பரந்த திட்டமும் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை மீறவில்லை என்று தெரிவித்தது.
  • மாதிரி நடத்தை விதிகளுக்கு சட்டப்பூர்வ ஆதரவு தேவையில்லை என்றும் அது கூறியது.
  • ஒரே நேரத்தில் வாக்கெடுப்புகள் என்பது நேரத்தையும் அது நடத்தப் படும் வரிசையை மட்டுமே மாற்றியமைக்கின்றன, ஜனநாயக வாக்களிக்கும் உரிமையை அல்ல என்றும் அது வலியுறுத்தியது.
  • வாக்களிக்கும் உரிமை என்பது உச்ச நீதிமன்றத்தால் தொடர்ந்து கடைபிடிக்கப் படும் வகையிலான ஒரு அடிப்படை உரிமை அல்ல, அது ஒரு சட்டப்பூர்வ உரிமை என்று ஆணையம் வலியுறுத்தியது.
  • இந்தக் காரணத்திற்காக, தேர்தல் அட்டவணைகளை அல்லது ஒத்திசைவுகளை ஒத்திசைப்பது குடிமக்களின் வாக்களிக்கும் உரிமையை பாதிக்காது.
  • இந்தியாவானது ஒன்றியத்தின் தெளிவான ஆதிக்கத்துடன் கூடிய அரை-கூட்டாட்சி மாதிரியைப் பின்பற்றுகிறது என்று ஆணையம் ஜேபிசியிடம் கூறியது.
  • முன்மொழியப்பட்ட கட்டமைப்பு, ஆணையத்தின் கூற்றுப்படி, இந்த அத்தியாவசியக் கூட்டாட்சி தன்மையைத் தொந்தரவு செய்யாது.
  • அரசாங்கம் சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் உட்பட தேர்தல்களில் சட்டம் இயற்ற வேண்டி அரசியலமைப்பானது நாடாளுமன்றத்திற்கு வெளிப்படையாக அதிகாரத்தை அளிக்கிறது என்பதோடு, இதன் மூலம் அந்தத் திட்டத்தின் செல்லுபடியை அது வலுப் படுத்துகிறது.
  • அரசியலமைப்பின் 368வது பிரிவின் கீழ், மசோதாக்களுக்கு மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டுமா என்ற கேள்விக்கு, கூட்டாட்சி அமைப்பைத் தொடும் எந்த ஒரு அரசியலமைப்பு விதியும் திருத்தப் படவில்லை என்றும், எனவே அதற்கு மாநில ஒப்புதல் தேவையில்லை என்றும் ஆணையம் தெளிவுபடுத்தியது.
  • 82A(3) மற்றும் 82A(5) பிரிவுகளின் கீழ் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு வழங்க முன் மொழியப் பட்ட அதிகாரங்கள் குறித்தும் ஆணையம் விரிவாக கருத்து தெரிவித்தது.
  • 324வது பிரிவு என்பது ஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்கான ஒரு அதிகாரக் களஞ்சியமாக செயல்படுகிறது என்றும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் ஆணையத்தின் பரந்த அதிகாரத்தை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன என்றும் சட்ட ஆணையம் JPCக்குத் தெரிவித்தது.
  • கூட்டு நாடாளுமன்றக் குழு அரசியலமைப்பு (129வது திருத்தம்) மசோதா, 2024, மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2024 ஆகிய இரண்டு மசோதாக்களை ஆராய்ந்து வருகிறது-.
  • இந்தியாவின் 23வது சட்ட ஆணையம் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி (ஓய்வு) தலைமையில் உள்ளது.
  • சட்டங்களை மறு ஆய்வு செய்வதற்கும் சீர்திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கும் என்று மூன்று ஆண்டு காலத்திற்கு இது செப்டம்பர் 2024 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்