குஜராத் அரசாங்கம் சமீபத்தில் ஒரே நாடு, ஒரே பணம் செலுத்துச் சீட்டு முன்னெடுப்பு என்பதினை நடைமுறைப் படுத்தியது.
ஒரே நாடு, ஒரே பணம் செலுத்துச் சீட்டு முன்னெடுப்பு என்பது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் ஒரு முன்னெடுப்பாகும்.
போக்குவரத்துக் காவல் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (RTO) போன்ற அனைத்துப் போக்குவரத்து முறையுடன் தொடர்புடைய அனைத்து முகமைகளையும் ஒரே தளத்தில் கொண்டு வருவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது தடையற்ற முறையிலான பணம் செலுத்துச் சீட்டு (அபராத ரசீது) சேகரிப்பு மற்றும் தரவுப் பரிமாற்றம் ஆகியவற்றிற்கு வழி வகுக்கும்.
தேசியத் தகவல் மையம் (NIC) ஆனது இதற்காக தனது செயலி ஒன்றினை அறிமுகப் படுத்த உள்ளது.
90 நாட்களுக்குள் அபராத தொகையைச் செலுத்தவில்லை என்றால், அந்த அபராத ரசீது தானாகவே காணொளி வாயிலான இணைய நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும்.
காணொளி வாயிலான நீதிமன்றங்களானது, நீதிமன்றத்தில் அதிகளவில் குவியும் வழக்குகளின் எண்ணிக்கையினைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.