இந்திய விஞ்ஞானிகள் ஒற்றை அலகில் சூரிய சக்தியைப் சேமிக்கக்கூடிய ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.
இது ஒரு ஒளிமின்னியல் சார் மீள்மின்னேற்றம் செய்யக்கூடிய மீத்திறன் மின்தேக்கி ஆகும் என்ற நிலையில்இது சூரிய ஆற்றல் அறுவடை மற்றும் சேமிப்பை ஒரே அமைப்பில் இணைக்கிறது.
இது சூரிய ஒளியை உறிஞ்சி மின்சாரத்தை சேமிக்க நிக்கல் நுரையில் வளர்க்கப்படும் நிக்கல்-கோபால்ட் ஆக்சைடு (NiCo₂O₄) நானோவயர்களைப் பயன்படுத்துகிறது.
இந்த சாதனம் சுமார் 1.2-வோல்ட் நிலையான வெளியீட்டை வழங்குகிறது மற்றும் 1,000 சுழற்சிகளுக்குப் பிறகு சுமார் 88% மின் தேக்கத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது.